Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2022 15:45:42 Hours

231 வது பிரிகேட் படையினர் தலா ரூபா 5000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கல்

231 வது பிரிகேட் படையினர் மட்டக்களப்பு உண்ணாச்சி மற்றும் குருக்கள்மடம் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5000/= பெறுமதியான 80க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகளை வெள்ளிக்கிழமை (16) வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் வழங்கிய அனுசரணையின் முலம் இலவசமாக வழங்கினர்.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டாரவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்பகுதிகளில் சேவையாற்றும் 4 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் ஆதரவளிக்கப்பட்டது.

231 வது பிரிகேட் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, அனுசரணை வழங்கும் புலம்பெயர்ந்தோருடனான ஒருங்கிணைப்பு மட்டக்களப்பு மக்கள் வங்கி கிளை முகாமையாளர் திரு சிசிர குமாரவினால் மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம சேவை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேர்வு செய்யப்பட்டனர். அரிசி, பருப்பு, சோயா இறைச்சி, மாவு, தானியங்கள், மசாலாப் பொருட்கள், கறுவாடு போன்றவை அடங்கிய ஒவ்வொரு நிவாரணப் பொதியும் படையினரால் அவர்களது வீட்டு வாசலுக்கு சென்று வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 23 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷெவந்த் குலதுங்க, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, 23வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.