21st July 2022 16:00:42 Hours
எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட் படையணியினர் அக்கரைப்பற்று நிந்தவூர் பகுதியில் பாண்டிரிப்பு விஷன் ஹோப்ஸ் சிறுவர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் நிந்தவூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு சமுக நலத்திட்டமாக உணவு வழங்கியுள்ளனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஆசிர்வாதத்துடன் 24 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின்படி படையினரால் தங்களின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 500 பகல் உணவுப் பொதிகளை சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன், 18 வது விஜயபாகு காலாட்படைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ் ஆர் கே டீ சிறிசேன, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.