Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2022 16:30:00 Hours

6 வது கவசவாகன படையணி படையினரால் முதல் நெல் அறுவடை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் கீழுள்ள 223 வது பிரிகேடின் 6 வது இலங்கை கவசவாகன படையணியின் படையினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மைலவெவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட 1.5 ஏக்கர் வயல்களில் சேதன உரங்களைப் பயன்படுத்தி நெற் பயிர் செய்கையினை மேற்கொண்டதுடன் கடந்த சனிக்கிழமை (16) நடைபெற்ற அறுவடை விழாவில் 1750 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்டன.

அரசாங்கத்தின் பசுமை விவசாய திட்டத்தின் கொள்கையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த பசுமை விவசாய திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெற்செய்கையினை தொடங்கியது. 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார மற்றும் 223 வது பிரிகேட் தளபதி ஆகியோரால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன இந்த திட்டத்திற்கு தனது ஆசிர்வாதங்களை வழங்கியதுடன், தொடர்ச்சியான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு படையினரை ஊக்குவித்தார்.

படையினரினால் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான சேதன பசளையினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடை நிகழ்வானது 6 வது கவச வாகன படையணியின் படையினரால் பாரம்பரிய சடங்குகளுக்கு மத்தியில் 16 திகதி ஆரம்பிக்கப்பட்டது.

223 வது பிரிகேட் தளபதி, 6 வது இலங்கை கவசவாகன படையணியின் கட்டளை அதிகாரி, 223 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 6 வது இலங்கை கவசவாகன படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அறுவடை விழாவில் பங்குபற்றினர்.