Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2022 17:00:00 Hours

கொமாண்டோ படையினரால் கல்வெவ துறவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கல்

கமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 4 வது கமாண்டோ படையணியின் படையினர், வெளிநாட்டில் உள்ள இலங்கை அனுசரணையாளர் ஒருவரின் நிதியுதவியினைக் கொண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் துரவிகளுக்கு 205 உலர் உணவுப் பொதிகளை செவ்வாய்க்கிழமை (12) அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள கல்வெவ விகாரையில் வைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பௌத்த பிக்குகளுக்கு உணவுப் பொருட்களையோ அல்லது அண்ணதானத்தையோ வழங்க முடியாத நிலையில் காணப்பட்ட, கல்வெவ பிரதேசத்தில் உள்ள ஏழைப் பொதுமக்கள் பிக்குகளுக்கு மதிய உணவாக ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுப்பதைக் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தமையால் இவ்வகையான காரணங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கமாண்டோ படையணியின் படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.

4 வது கொமாண்டோ படையணி படையினர்கள் மற்றும் பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் வரையறுக்கப்பட்ட ஒரேடூ கட்டார் கம்பனியின் (‘Ooredoo Qatar’ Company Ltd) பிரதம சிரேஷ்ட கணக்காளர் திரு ஜே.எச். ஏக்கநாயக்க அவர்கள் ஹம்பாந்தோட்டை கல்வெவ வறிய மக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தனது அனுசரணையை வழங்கினார். கல்வெவ புராதன ரஜமஹா விஹாரையில் பிக்குகள் மற்றும் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜானக சமரசேகர இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக தனது ஆதரவை வழங்கினார்.

அனுசரணையாளர், திரு ஜே.எச் ஏக்கநாயக்க, லெப்டினன் கேணல் கே.வி.டி.எஸ் கெகுலவல, 4 வது கொமாண்டோ படையணி கட்டளை அதிகாரி, , முதலாவது கொமாண்டோ படையணியின் 'பீ' குழுவின் கமாண்டோ படையினர்கள் மற்றும் சிப்பாய்கள் விநியோக திட்டத்தில் கலந்து கொண்டனர்.

வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் தலா 2000.00 ரூபா பெறுமதியான அரிசி, பருப்பு, வெங்காயம், சீனி, பிஸ்கட், சோயா, மசாலாப் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக காணப்பட்டது.