20th July 2022 20:29:18 Hours
மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க புதன்கிழமை (20) இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றார்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் தனது புதிய அலுவலகத்திற்கு வந்ததும் 'பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவரது புதிய நியமனத்திற்கு முன்னர், அவர் இராணுவ தலைமையகத்தில் இராணுவ செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி (நிரந்தர பாடநெறி 87) மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி (நிரந்தர பாடநெறி 31) ஆகியவற்றில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்த பிறகு, 2வது லெப்டினன் ஆக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய பீடத்தின் பீடாதிபதியாகவும் 51 வது படைப்பிரிவின் தளபதியாகவும், இராணுவ தலைமையகத்தின் இராணுவச் செயலராகவும் மேலும் பல சிரேஸ்ட நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.
அவர் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளராகவும், இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.