19th July 2022 16:45:56 Hours
இராணுவத்தின் பரா-விளையாட்டுகளின் டேபிள் டென்னிஸ் போட்டியானது 12 ஜூலை 2022 அன்று பனாகொட இராணுவ உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் தலைமையக படையலகினால் நடாத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான போட்டியில் ஆறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தலைமையக படையலகின் விஜயபாகு காலாட்படை படையணி வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
தலைமையக படையலகின் விஜயபாகு காலாட்படை படையலகின் சார்ஜன்ட் எச்.எம்.சி ருவன்திலக சிறந்த ஆட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார். இறுதிப் போட்டியின் முடிவுகள் பின்வருமாறு:
சம்பியன்ஷிப் - தலைமையக படையலகு விஜயபாகு காலாட்படை படையணி
இரண்டாம் இடம் - தலைமையக படையலகு கஜபா படையணி
மூன்றாம் இடம் - தலைமையக படையலகு இலங்கை இலேசாயுத காலாட் படையணி