19th July 2022 16:15:56 Hours
37 பேர் மாணவர்களைக் கொண்ட முல்லைத்தீவு மாங்குளம் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலைக்கு, 57 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 573 வது பிரிகேடின் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக, பாடசாலை உபகரணங்கள் மற்றும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் சனிக்கிழமை (16) வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் தில்லுார் ஆரம்பப் பாடசாலையின் 37 வறிய மாணவர்கள் பாடசாலை உபகரணங்களையும் மாங்குளம் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கஷ்டப் பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் வசதிகளை உயர்த்தும் நோக்கத்தில் 573 வது பிரிகேட் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத் திட்டத்திற்கான நிதியுதவியை திரு ஆர்.ஏ ரொஷான் மதுரங்க மற்றும் திரு அகில பிரபாத் ஆகியோர் வழங்கினர்.
571 மற்றும் 573 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோகத் திட்டத்தில் இணைந்து கொண்டனர்.