Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2022 17:33:56 Hours

கிரிசுட்டான் கிராம மக்களுக்கு இராணுவத்தின் ஒருங்கிணைப்பு மூலம் நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன

வண. தலகல ஸ்ரீ சும்னாரரண தேரரின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூரிர் டென் யெக் பூய் மற்றும் கீ மெங் லெங் அமைப்பு (Tan Ngk Buay & Kee Meng Lang Foundation Limited) ஆகியவையால் 65 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 653 வது பிரிகேடின் வேண்டுகோளின் பேரில் 50 உலர் உணவுப் பொதிகள் வெள்ளிக்கிழமை (15) மன்னார் கிரிசுட்டான் கிராம சேவைப் பிரிவின் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க மற்றும் 653 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.ஏ.டி.பி கனேஹியாராச்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 50 உலர் உணவு பொதிகளில் அரிசி, பருப்பு, பால் மா, மிளகாய், மசாலா போன்றவை உள்ளடங்கியிருந்தன.

இந்நிகழ்வில் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.