Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2022 16:30:56 Hours

6 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் உடையார்கட்டு கிராம மக்களின் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய ஆராய்வு

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் குறித்த புதுப்பிப்புகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதனை நோக்கமாக கொண்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் உடையார்கட்டு 681 வது பிரிகேடின் 6 வது கெமுனு ஹேவா படையினர் முல்லைத்தீவு, வள்ளிபுரம் உடையார்கட்டு தெற்கு மற்றும் தேராவில் கிராம சேவை பிரிவுகளின் கிராம சேவையாளர்களை (அதிகாரிகள்) வெள்ளிக்கிழமை (15) கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தனர்.

உடையார்கட்டு 6 வது கெமுனு ஹேவா படையணியின் முகாமில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அந்தந்தப் பகுதிகளின் பொதுமக்களின் சிரமங்கள் மற்றும் அவர்களின் பயிர்ச் செய்கைகளின் முன்னேற்றம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஏனைய தேவைகள் போன்றவை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

68 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க அவர்களுடன் இணைந்து இந்த கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி அந்த அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்விற்கு இணையாக, பிரதேசத்தில் வசிக்கும் 10 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன, ஒவ்வொன்றும் தலா ரூபா 4000/= பெறுமதியான உணவுப் பொதிகளுக்கான அனுசரணையினை 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் வழங்கப்பட்டது.

அதிகாரிகள், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகள் விநியோகத் திட்டத்தில் கலந்துக் கொண்டனர்.