Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 19:32:57 Hours

பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேற்குத் தளபதியுடன் காயமடைந்த படையினர்களை பார்வையிட்டார்

நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது காயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள விஜயபாகு காலாட் படையணி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படையினர்களை பார்யைிடும்முகமாக, இராணுவ தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல ஆகியோர் இணைந்து வார இறுதியில் அவ்வைத்தியசாலைக்கு சென்றனர்.

பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் விஜயபாகு காலாட்படை படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் இந்த விஜயத்தின் போது அவர்களுடன் சில வார்த்தைகள் பேசியதுடன், பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம் பெற்ற அமையின்மையின் போது நாட்டின் சிறந்த நலன்களுக்காக அவர்களின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பைப் பற்றி உயர்வாகப் பேசினார்.

அவர் மருத்துவ அதிகாரிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் மீட்பு சிகிச்சை செயல்முறையை விசாரித்து, அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் சிறந்த சிகிச்சையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள், காயமடைந்த இராணுவ வீரர்களுடன் உரையாடியதுடன், நாட்டின் சிறந்த நலன்களுக்காக அவர்களின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு பணிகளை பாராட்டினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தில் எயார் மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபத் சஞ்சீவ, லெப்டினன் கேணல் எச்.பி.சி கருணாரத்ன, 1 வது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தின் சார்ஜென்ட் மேஜர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி புதன்கிழமை (13) அமையின்மை செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முகமாக, அமைதியான முறையில் கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினரில் இருபத்து நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர் என்பது அறியத்தக்க விடயமாகும்.