Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 14:30:04 Hours

சக்கர நாற்காலி டென்னிஸ் வெற்றி கெமுணு ஹேவா படையணிக்கு

கெமுணு ஹேவா சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் ஜூலை 11 – 12 திகதிகளில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தில் இலங்கை பீரங்கிப் படையணி, இலங்கை சிங்கப் படையணி, கஜபா படையணி, விஜயபாகு காலாட் படையணி மற்றும் கமாண்டோ படையணி ஆகிய இராணுவப் படையணிகளுக்கு இடையில் நடைப்பெற்ற டென்னிஸ் போட்டி - 2022 இல் போட்டியிட்டு வெற்றிக்கிண்ணத்தினை தட்டிச்சென்றனர்.

இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை பீரங்கிப் படையணி டென்னிஸ் வீரர்கள் போட்டியில் 2 வது மற்றும் 3 வது இடங்களை பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை பீரங்கி படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சாந்த ஹேவகே மற்றும் இலங்கை பீரங்கி படையணின் தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.