Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 17:00:04 Hours

மத ஆசிர்வாதத்துடன் இராணுவ தொண்டர் படையணி தலைமையக புதிய கட்டிடம் நிர்மாணிப்பு

இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையகத்தில் திறக்கப்படவுள்ள புதிய தலைமையக வளாகத்திற்கு ஆசிர்வாதம் வழங்கும் முகமாக அனுராதபுரம், கதிர்காமம், களனி, இரத்தினபுரி, நவகமுவ, அகரவித, ஆகிய முன்னனி பௌத்த தலங்கள், ஹங்வெல்ல ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் களுஹக்கல புனித சோர்ரோ மாதா தேவாலயம் ஆகியவற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (12) சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த சமய நிகழ்ச்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (12) மாலை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரதேசத்திலும் தொண்டர் படையணியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள படையலகுகளின் அங்கத்தவர்கள் இந்த சமய நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அதன்படி, அனுராதபுரம் ருவன்வெலி மஹா சேய, கதிர்காமம் கிரிவேர, களனி ரஜமஹா விகாரை, இரத்தினபுரி ஸ்ரீ சுமண சமன் விகாரை, நவகமுவ பத்தினி ஆலயம், அகரவிட்ட லெனவர ரஜமஹா விகாரை, ஹங்வெல்ல ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் களுஹக்கல புனித சோர்ரோ மாதா தேவாலயம் ஆகியவற்றில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தலைமையக வளாகத்திற்கு மத நிகழ்ச்சிகளை நடாத்தி ஆசிர்வாதம் சேர்க்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணி தலைமையகம் முன்னர் நிலைகொண்டிருந்த தலைமையக கட்டிடம் தற்செயலாக வெடித்ததன் காரணமாக அதன் செயற்பாட்டுத் தேவைகளுக்காக, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் அலுவலகங்கள் தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ வழங்கல் பிரிவு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.

இதன்படி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தலைமையகக் கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை (12) மகா சங்கரத்ன மற்றும் சகல சமய குருமார்களின் ஆசீர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆசீர்வாத நிகழ்ச்சிகளில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு மத தலங்களில் கலந்துக் கொண்டனர்.