18th July 2022 18:03:04 Hours
இலங்கை கவச வாகனப் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட, திங்கட்கிழமை (18) நடைபெற்ற மத அனுஷ்டனங்களை தொடர்ந்து இராணுவத் தலைமையகத்தில் புதிய இராணுவச் செயலாளராகப் பதவியேற்றார்.
இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியாகவும் இருக்கும் மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட புதிய அலுவலகத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.
அலுவலகத்திற்கு வந்தவுடன் அவர் இராணுவ செயலாளராக தனது பதவியை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் முறையாக கையொப்பமிடுவதற்கு முன்பு மத அனுஷ்டானங்களில் ஈடுப்பட்டார்.
1988 இல் இராணுவ பயிலிளவல் அதிகாரி இணைந்து கொண்ட அவர், தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் தனது ஆரம்ப பயிற்சியை முடித்த பின்னர் இலங்கை கவச வாகனப் படையணியின் 2ம் லெப்டினன் நிலையில் ஆணையதிகாரம் பெற்றார். இவர் இராணுவ போர் கல்லூரி தளபதி, 61 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் சில சிரேஸ்ட பதவிகளையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.