Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 16:00:04 Hours

படையினரால் கோவில் வளாகத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 ஆது படைப்பிரிவின் 642 வது பிரிகேட்டின் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் ஒட்டுசுட்டான் சிவன் கோவில் வளாகத்தில் வருடாந்த விஷேட பூஜைக்காக ஆலய வளாகத்தை சுத்தப்படுத்தும் நற்பணி நிகழ்ச்சியை திங்கட்கிழமை (11) மேற்கொண்டனர்.

இந்த சிரமதான நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஆலய குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தி இச் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்ட 641 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டி.பி.ஜே.சி. ஜயவர்தன, படையணியின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் எச்.எம்.ஐ.கே. சமரநாயக்க மற்றும் 23 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி உட்பட 25 இராணுவ வீரர்களுக்கும் ஆசிகள் வழங்கினார்.