Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 15:30:04 Hours

121 வது பிரிகேட் படையினரால் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ அணைப்பு

வெல்லவாய, மஹகொடயாய மற்றும் தேவகிரி மலைத்தொடரை அண்மித்த பகுதிகளில் கடந்த சனிக்கிழமை (16) ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயினை 121 வது பிரிகேட் படையினர், விரைந்து செயற்பட்டு சில மணித்தியாலங்களில் கட்டுப்படுத்தினர்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 121 வது பிரிகேட் தளபதி மற்றும் பிரிகேட்டினை பயைலகுகளின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் காடு முழுவதும் தீ பரவுவதை தடுத்து தண்ணீரைப் பயன்படுத்தி காட்டுத் தீயை விரைவாக அணைத்தனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, அவசரகால நிலையை கண்காணித்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.