Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2022 17:30:04 Hours

55 வது படைப்பிரிவினர் சிறார்களின் மொழித்திறனை மேம்படுத்த உதவி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள கெவில் மற்றும் கடைக்காடு கிராமங்களில் உள்ள தரம் 6 - 9 கற்கும் ஏழை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகையில், இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட ஆங்கிலம் கற்பிக்கும் திட்டத்தை சனிக்கிழமை (16) ஆரம்பித்தனர்.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் ஆங்கில பயிற்றுவிப்பாளர் கேப்டன் சுனேத் ரத்நாயக்க, ஆகியோரின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 முதல் 11 மணி வரை 55 வது படைத் தலைமையக வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்படும்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூற்றுப்படி சிறுவர்களின் மொழித் தரம் ஒப்பீட்டளவில் மோசமாக இருப்பதால், குறைந்த வருமான குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டமான கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதேசத்தைச் சேர்ந்த 20 சிறுவர்களின் பங்குபற்றுதலுடன் சனிக்கிழமை (11) இடம்பெற்றது. இத்திட்டம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலுடன் பாதுகாப்புப் படையினருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.