Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2022 18:00:16 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறிக்கு கமாண்டோ படையணி தலைமையகத்தில் வாழ்த்து

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, இராணுவத்தில் இருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக பாராட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

கமாண்டோ படையணி தலைமையகத்திற்கு வருகைத்தந்த மேஜர் ஜெனரல் அனில் சமரசிறிக்கு, கமாண்டோ படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கமாண்டோ தலைமையக போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், இந்நிகழ்வை முன்னிட்டு முகாம் வளாகத்தில் மாங்கன்று நாட்டி வைத்த மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, அனைத்து அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர், அனைத்து நிலை படையினருக்கும் உரையாற்றிய மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, தனது மூன்று தசாப்த கால இராணுவ வாழ்க்கையின் நினைவுகள் மற்றும் அனுபவங்களைப் நினைவுகூர்ந்ததுடன் கமாண்டோ படைப்பிரிவின் முன்னேற்றத்திற்காக வாழ்த்தினார்.

பாராட்டு விழாவின் இறுதிப் நிகழ்வாக படைத் தளபதி அனைத்து கமாண்டோக்கள் சார்பாக மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களுக்கு பாராட்டுச் சின்னம் வழங்கினார்.

இந்த வைபவத்தின் போது, மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, தனது இராணுவ வாழ்க்கையின் சாதனைகளுக்காக தமக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளுடனும் சிநேகபூர்வ கலந்துரையாடலினை மேற்கொண்டதுடன், இந்த வைபவத்தின் இறுதியில், படையணி சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் எழுதி சென்றார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலை அனைத்து கமாண்டோக்களும் பிரதான நுழைவாயில் வரிசையில் நின்று தங்களது இராணுவ மரியாதையை செலுத்தினர். கமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, கமாண்டோ படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் கமல் தர்மவர்தன, தற்போது சேவையாற்றும் பல படையணி பேரவை உறுப்பினர்கள் மற்றும் கமாண்டோ அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.