Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2022 19:10:16 Hours

68 வது படைப்பிரிவு படையினர் அனுசரனையாளரின் உதவியுடன் 600 பக்தர்களுக்கு உணவு மற்றும் 80 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவுத் தலைமையகத்திற்குப் நன்கொடையாளர் ஒருவர் வழங்கிய அனுசரணையின் மூலம் முத்துமாரி அம்மன் இந்து ஆலயத்தில் வருடாந்த பூஜையில் கலந்துகொள்ளும் 600க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சனிக்கிழமை (9) இலவசமாக உணவு வழங்குவதற்கும், அப்பகுதியில் உள்ள பாடசாலை சுமார் 80 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

68 வது படைப்பிரிவின் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் கோவில் குருக்கள் மற்றும் அறங்காவலர்களின் உதவியுடன் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு சமூக திட்டங்களின் ஒரு பகுதியாக இரண்டு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்தனர். படையினர் தங்கள் முகாமில் சைவ உணவுகளை சமைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 68 வது படைப்பிரிவின் ஆகியோர் இந்த திட்டங்களுக்கு வழிகாட்டுதல்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினர்.

9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்,