Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2022 14:24:26 Hours

66 வது படைப்பிரிவின் 11 வது தளபதி கடமை பொறுப்பேற்பு

இயந்திரவியல் காலாட் படையணியின் பிரிகேடியர் ஜனக பிரியந்த அவர்கள் ஜூன் 20 அன்று பூனகரி 66 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 66 வது படைப்பிரிவின் 11 வது தளபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 66 வது படைப்பிரிவின் தளபதி படைப்பிரிவின் வளாகத்தினுள் வருகை தந்தவுடன் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றதுடன் மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் அவரது கடமைகளை பொறுப்பேற்று கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர், புதிய தளபதி அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தியதுடன் நிகழ்வின் அடையாளமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.இந்த நிகழ்வின் போது 66 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.தற்பொழுது பாதுகாப்பு கட்டளை சேவை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம் பெற்றமையை அடுத்து இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிரிகேடியர் ஜானக பிரியந்த இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவ தலைமையக சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.