15th July 2022 08:43:19 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 643 வது பிரிகேடின் 8 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் நன்கொடையாளரின் அனுசரணையுடன் ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுக்குளம் தென்கரை பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் திங்கட்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டன.
643 வது பிரிகேட் தளபதி கேணல் ராஜித பிரேமதிலக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரு.சுரேன் மல்கம் டி சில்வா அவர்களின் அனுசரணையிலான இந்த சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு செயற்திட்டத்திற்கான தகுதியான மாணவர்களை தெரிவு செய்ததல் 8 வது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விநியோக திட்டத்தில் 643 வது பிரிகேட் தளபதி, 8 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.