Header

Sri Lanka Army

Defender of the Nation

14th July 2022 17:51:47 Hours

12 வது படைப்பிரிவின் உதவியுடன் அம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவு தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பிஐஎம்ஏ ('PIMA UAE' ) பிரிவும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை சமூகமும் இணைந்து செவ்வாய்கிழமை (12) அம்பாந்தோட்டை அரச மருத்துவமனைக்கு அவசர தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு அனுசரணை வழங்கியுள்ளனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று செவ்வாய்க்கிழமை (12) வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுரங்க பஸ்நாயக்கவிடம் அந்த மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அந்த துணைக்கருவிகள் அவசரமாக தேவைப்பட்டன. அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட நன்கொடையாளர்கள் 12 வது படைப்பிரிவின் தளபதியின் குறுகிய வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை வழங்க முன்வந்தனர்.

மருத்துவ உபகரணங்களை வழங்கும் இந்நிகழ்வில் 12 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.