12th July 2022 15:12:39 Hours
நிகவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையின் தளபதியாக கடமையாற்றிய கெமுனு ஹேவா படையணியின் கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள, இதய செயலிழப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்த நிலையில், திங்கட்கிழமை (11) திடீரென காலமானார். அவரது துரதிர்ஷ்டவசமான மரணத்தின் போது அவருக்கு 49 வயது.
2009 மே மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடிப்பதில் தீவிரப் பங்களிப்பை வழங்கிய சிறப்புப் படையணியின் முன்னாள் வீரராகப் பணியாற்றிய கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள, பின்னர் கெமுனு ஹேவா படையணியில் இணைந்தார்.
அவரது பூதவுடல் தற்போது தொடங்கொடை நாகொட சேதர குணதிலக தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (13) மாலை 4.00 மணிக்கு நாகொட அட்டாவில தோட்ட மயானத்தில் நடைபெறும்.