Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2022 15:00:39 Hours

இராணுவ தடகள குழு தலைவர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பு

இராணுவ தடகள குழுவின் தலைவரும் இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் வெள்ளிக்கிழமை (8) டொரிங்டன் மைதானத்திற்கு விஜயம் செய்து இலங்கை தடகள குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி அமர்வுகளை பார்வையிட்டார்.

விளையாட்டு வீரர்களுடனான தனது உரையாடலின் போது, மேலும் வெற்றிகளை அடைவதற்கான மன உறுதியை அவர் வழங்கியதுடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய நிலையான பயிற்சி அமர்வுகளின் முக்கியத்துவம் பற்றி அவர் கலந்துரையாடினார். அதே சமயம் யோகா பயிற்சியின் போது பயன்படுத்த சில மெத்தைகளை பரிசாக வழங்கினார். இந்த விளையாட்டு வீரர்கள் இலங்கை விளையாட்டு வீரர்களின் அனைத்து குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேலும் இவ் விஜயத்தின் போது இலங்கை இராணுவ தடகள குழுவின் செயலாளரும் 581 வது பிரிகேட் தளபதியுமான பிரிகேடியர் பிரியந்த நவரத்ன, இலங்கை இராணுவ தடகள அபிவிருத்தி குழுவின் தலைவரும் இலங்கை இராணுவ தொண்டர் படை விளையாட்டு அதிகாரியுமான லெப்டினன் கேணல் சுஜீவ பிரியந்தலால் மற்றும் இராணுவ தடகள குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்திருந்தனர்.