12th July 2022 14:30:39 Hours
இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் தலகல ஸ்ரீ சித்தார்த்தா அறக்கட்டளையின் வண. ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர் மற்றும் சிங்கப்பூரின் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation ஆகியவற்றின் உதவியுடன் வியாழக்கிழமை (7) ஹபராதுவ பகுதியில் வசிக்கும் ஏழை பொதுமக்களுக்கு மொத்தம் 150 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.613 வது பிரிகேடின் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையினர், ஹபராதுவ பிரதேச செயலகத்திலுள்ள கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மிகவும் வறிய பொருளாதார பின்னடைவுடைய பயனாளிகளை கண்டரிந்து ஹபராதுவ தர்மிகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில் அனுசரணையாளர் வண. தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர், காலி மாவட்ட செயலாளர், ஹபராதுவ பிரதேச செயலாளர், 14 வது (தொ) கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி,அதிகாரிகள் மற்றும் 613 வது பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். 61 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க மற்றும் 613 வது பிரிகேட் தளபதி கேணல் இந்திக்க ஜயவீர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 14 வது (தொ) கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் அசேல விஜேரத்ன இவ் திட்டத்தினை மேற்பார்வையிட்டார்.
தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர் மற்றும் Tan Ngak Buay & Kee Meng Lang அறக்கட்டளை இணைந்து கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அந்தந்த படையினரின் உதவியுடன் நிவாரணப் பொதிகளை வழங்கி வருகின்றன.