Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2022 14:40:57 Hours

121 வது பிரிகேட் படையினரால் வடினகல பகுதியில் காட்டுத்தீ அணைப்பு

வெல்லவாய பிரதேச வடினகல மலைத்தொடர் பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத் தீயை 121 வது பிரிகேட் படையினர் சனிக்கிழமை (9) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.காட்டுத் தீ பற்றி அறிவிக்கப்பட்டவுடன், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அறிவுறுத்தலின் பேரில், 121 வது பிரிகேட் தளபதி மற்றும் அதன் கீழ் நிறுவப்பட்டுள்ள படையலகுகளின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் படையினர் தண்ணீரைப் பயன்படுத்தி காட்டு தீ வனப்பகுதியில் வேகமாக பரவலைக் கட்டுப்படுத்தினர்.

12 வது படைப்பிரிவின் தளபதியினால் அவசரநிலையை உன்னிப்பாகக் கண்காணித்து, தீயைக் கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.