11th July 2022 14:43:32 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேடின் 17 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர்களின் ஒருங்கினைப்பில் மாங்குளம் நெடுங்கேணி பிரதேசத்தின் குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தங்களது சொந்த முயற்சியில் 2022 ஜூலை 2 அன்று 25 உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
ஒவ்வொரு உலர் உணவு பொதிகளிலும் தலா 2500 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மசாலா, சோயா போன்றவை அடங்கியுள்ளதுடன் அவை முகாமை சுற்றியுள்ள வீடுகளுக்கு வீட்டு வாசலுக்கு சென்று வழங்கப்பட்டன. நிலவும் பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் குறைக்கும் பொருட்டு அந்த நிவாரணப் பொதிகளுக்கான செலவை தாங்களாகவே செலுத்த படையினர் முன்வந்தனர்.
இத்திட்டத்தில் 17 வது (தொ) விஜயபாகு காலாட்படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீ எல் ஆர் ஜெயசுந்தர , அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்துகொண்டனர்.