Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 16:22:32 Hours

23 வது படையணிகளுக்கிடையிலான மாற்றுத்திறனாளி வில்வித்ததை போட்டியில் இலங்கை இராணுவ சிங்க படையணி வெற்றி

இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகப் படையலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் 23 வது படைப்பிரிவுகளுக்கிடையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டியின் இறுதிச் சுற்றுகள் 2022 ஜூலை மாதம் 08 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் நடைப்பெற்றது.இலங்கை இலேசாயுத காலாட் படையணி, இலங்கை சிங்கப் படையணி, கெமுனு ஹேவா படையணி, கஜபா படையணி, விஜயபாகு காலாட் படையணி மற்றும் இராணுவ விஷேட படையணி ஆகியவற்றின் மாற்றுத்திறனாளிகள் வில்வித்தை அணிகள் வில்வித்தை சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தன.

இலங்கை இராணுவ சிங்க படையணி அணி 2022 ஆம் ஆண்டுக்கான இராணுவ மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை சம்பியனாக இலங்கை இலேசாயுத காலாட்படையணி அணியை வீழ்த்தி வெற்றியினை உறுதி செய்தது.

இலங்கை இராணுவ சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால அவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவ சிங்க படையணியின் அனைத்து பணிநிலை அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். அன்று வருகை தந்த பிரதம அதிதியை இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையக கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கமல் ஞானரத்ன அன்புடன் வரவேற்றார்.

பரிசளிப்பு நிகழ்வின் போது, போட்டியின் சம்பியனுக்கான விருதை பிரதம அதிதியால் வழங்குவதற்கு முன்னதாக நிகழ்வில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) எச்.ஆர் விக்ரமசிங்க மற்றும் கேணல் வஜிர அமரசிறி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி வைத்தனர்.

இலங்கை இராணுவ சிங்க படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் வஜிர அமரசிறி, இலங்கை இராணுவ சிங்க படையணியின் பணிநிலை அதிகாரிகள், இலங்கை தேசிய வில்வித்தை சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வில்வித்தை குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் படையினர் இறுதிப் போட்டிகளை பார்வையிட்டனர்.

பதக்கம் வென்றவர்களின் பட்டியல் வருமாறு;

சிறந்த வில்வித்தையாளர்

லெப்டினன் கேணல் (ஓய்வு) டபிள்யூ. ஏ. ஜே. என் வீரதுங்க - இலங்கை இராணுவ சிங்க படையணி

30 மீற்றர் நின்ற நிலை

முதலாம் இடம் - கோப்ரல் டபிள்யூ. எம். எஸ். சி விக்ரம்சிங்க – இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

2ஆம் இடம் - கோப்ரல் என்.ஆர்.அத்துகோரல – கஜபா படையணி

3ஆம் இடம் - மேஜர் எம்.பி குமார - கஜபா படையணி

30 மீற்றர் சக்கர நாற்காலி

முதலாம் இடம் - கோப்ரல் (ஓய்வு) ஜீ எல் சிந்தக குமார - இலங்கை இராணுவ சிங்க படையணி

2ஆம் இடம் - சிப்பாய் டி.எம்.ஜே.எல்.திசாநாயக்க - கஜபா படையணி

3ஆம் இடம் - கோப்ரல் பி.எம்.ஆர்.எஸ் பரணமான - கஜபா படையணி

30/50 மீற்றர் நின்ற நிலை

முதலாம் இடம் - சிப்பாய் எம்.பி.என் பிரசாத் - கஜபா படையணி

2ஆம் இடம் - சிப்பாய் பி.டி.பி.எஸ் விஜேசூரிய - கஜபா படையணி

3ஆம் இடம் - கோப்ரல் எம்.எல்.பி விஜய குமார - இலங்கை இராணுவ சிங்க படையணி

30/50 மீற்றர் சக்கர நாற்காலி

முதாலாம் இடம் - கோப்ரல் (ஓய்வு) எம்.டி.டி.எஸ் கருணாரத்ன - இலங்கை இராணுவ சிங்க படையணி

70 மீற்றர் திறந்தபிரிவு சாம்பியன்ஷிப்

முதலாம் இடம் - லெப்டினன் கேணல் (ஓய்வு) டபிள்யூ. ஏ. ஜே. என் வீரதுங்க - இலங்கை இராணுவ சிங்க படையணி

2 ஆம் இடம் - மேஜர் ஜெனரல் (ஓய்வு) எச். ஆர் விக்கிரமசிங்க - இலங்கை இராணுவ சிங்க படையணி

3 ஆம் இடம் - கோப்ரல் எம்.ஜி.எஸ் பண்டார - இலங்கை இராணுவ இலேசாயுத படையணி

70 மீற்றர் குழு திறந்தபிரிவு சாம்பியன்ஷிப்

முதலாம இடம்:

கோப்ரல் எம் ஜீ எஸ் பண்டார - இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

கோப்ரல் ஏ.ஜி.டபிள்யூ.எஸ் குமார - இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

2ஆம் இடம்:

லான்ஸ் கோப்ரல் ஜி.ஜி.எஸ்.ஆர்.எஸ்.பிரியந்த - இலங்கை இராணுவ சிங்க படையணி

கோப்ரல் (ஓய்வு) ஜே. எல் சிந்தக குமார - இலங்கை இராணுவ சிங்க படையணி

3ஆம் இடம்:

லெப்டினன் கேணல் (ஓய்வு) டபிள்யூ. ஏ. ஜே. என் வீரதுங்க - இலங்கை இராணுவ சிங்க படையணி

மேஜர் ஜெனரல் (ஓய்வு) எச்.ஆர் விக்ரமசிங்க - இலங்கை இராணுவ சிங்க படையணி