09th July 2022 16:43:28 Hours
இயந்திரவியற் காலாட்படை படையணி படையினரினால் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இராணுவத்தின் பசுமை விவசாயத் திட்டத்திற்கு இணங்க, தம்புள்ளை, தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியற் காலாட்படை படையணி தலைமையகத்தின் அருகில், கைவிடப்பட்ட நெல் வயல்களில் ஒரு பகுதியில் பயிரிடப் தொடங்கினர்.
கிட்டத்தட்ட 5 ஏக்கர் கைவிடப்பட்ட வயல்களில் ஆரம்ப கட்டமாக பருவகால பயிராக கௌபி செய்கை திட்டத்தின் தொடக்க விழா 2022 ஜூலை 3 அன்று ஆரம்பிக்கப்பட்டது.அன்றய தின பிரதம அதிதியான இயந்திரவியற் காலாட்படையணி படைத் தளபதியும் இராணுவ பிரதிப் பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் பணிப்புரையின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வருகை தந்த அவரை, இயந்திரவியற் காலாட் படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய மற்றும் இயந்திரவியற் காலாட்படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிகழ்வின் போது, இராணுவ பிரதிப் பதவிநிலைப் பிரதானி நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடி, இராணுவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தேசிய இலக்குகளை அடைய விவசாயத் துறையுடன் இராணுவம் எவ்வாறு கைகோர்ப்பது மற்றும் கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் உரிமையாளர்கள் அல்லது விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலங்களில் உடனடி பயிர்ச்செய்கை மூலம் உணவு உற்பத்தியை பெருக்குவது குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
இயந்திரவியற் காலாட் படையணி பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.