09th July 2022 16:03:28 Hours
முதலாம் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்னவின் வழிகாட்டுதலின்படி கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகப் படையினர் அரசாங்கத்தின் தற்போதைய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், புதன்கிழமை (6) தமது முகாம் வளாகத்தினுள் வெண்டக்காய், பச்சை மிளகாய், கத்தரி, குடைமிளகாய், வாழை மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறி வகைகளை பயிரிடும் பணியை ஆரம்பித்தனர்.
இந்த திட்டம் 20 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படுவதுடன் 23 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் மா செய்கைக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் விவசாயத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாம் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இதேவேளை, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் பணிப்புரையின் பேரில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் பண்ணைகள் மற்றும் வயல்களில் பல்வேறு வகையான மரக்கறிகள், பழங்கள் மற்றும் நெற் செய்கையினை அண்மையில் ஆரம்பித்தது.
நெருக்கடி நிலையைச் சமளிப்பதற்காக தற்காலிக அடிப்படையில் பயிரிடப்படாத நிலங்கள் மற்றும் வயல்களில் இத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது. வெலிகந்த பிரதேசத்தில் மொத்தமாக 471.9 ஏக்கர் காணியில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினர் நெல், எள்ளு, பாசிப்பயறு, பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பச்சை பட்டாணி போன்றவை பயிரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.