Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 14:10:52 Hours

புதிதாக கடமையேற்ற இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி கடந்த மூன்று வாரங்களாக கடமையாற்றிய காலம் தொடர்பான மீளாய்வு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா கடந்த புதன்கிழமை (06) இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 'எதிர்கால உத்திகள்' குறித்தும் படையணி பல்நோக்கு மண்டபத்தில் அந்தப் பதவிக்கு பொறுப்பேற்ற பிறகு தாம் ஆற்றிய 21 நாள் காலப் பணிகள் குறித்தும் விரிவான மீளாய்வு உரையினை ஆற்றினார்.

அவர் தனது உரையில், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 'பசுமைப் படை' யோசனை மற்றும் வேறு சில முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்தார். அத்துடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் செயற்பாடுகள், எதிர்கால மூலோபாயத் திட்டங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்தும் இந்த விரிவுரையில் கலந்துரையாடப்பட்டது.

இந்த விரிவுரையானது இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து முகாம்களுக்கும் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக ஒளிபரப்பப்பட்டது.