Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 13:10:52 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினரால் பெற்றோல் வரிசையில் உள்ளவர்களுக்கு 500 இலவச உணவுப் பொதிகள் வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவின் பணிப்புரையின் பேரில், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையினர், பூனேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்களுக்கு 500 சமைத்த உணவுப் பொதிகளை வழங்கும் நற்பணி நிகழ்ச்சியை வியாழக்கிழமை (07) மேற்கொண்டனர்.

மக்களின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்) இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக வழங்கல் பதவி நிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் சி.எஸ் தேமுணி படையினருடன் இனைந்து இவ் உணவு பொதிகளை வழங்கினார்.