Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 16:10:52 Hours

தாய் மற்றும் மாற்றுதிறனாளி குழந்தையுடன் நிட்டம்புவ பிரதேசத்தில் தடுமாறியவர்களை காலி பிரதேசத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்கான வசதிகள் இராணுவத்தினரால் ஏற்பாடு

நிட்டம்புவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்த தாயாரும் அவரது அங்கவீனமுற்ற குழந்தையும் வீட்டு உரிமையாளர் அந்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அது தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 6 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரியின் தலையீட்டின் மூலம், படையினர் நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையில் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.

எரிபொருள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி தவித்த தாயும், குழந்தையும் காலி மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், உடமைகளுடன் நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் பல நாட்கள் தங்கியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, 6 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் ஏ.எச்.எம்.டி. குணரத்ன தலைமையில் இராணுவப் படையினர் மைதானத்திற்கு வந்து அவர்களின் பிரச்சினையை ஆராய்ந்ததையடுத்து அவர்கள் காலி, பொத்தல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்ற தகவலை வெளிக்கொணர முடிந்தது.

அங்கு நிட்டம்புவ வர்த்தக சங்கத்தின் தலைவரும் நிஹால் பேஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.நிஹால், தாயையும் பிள்ளையையும் காலி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த புதன்கிழமை (06) வாகனம் வழங்க சுயமாக முன்வந்தார்.இதன்படி, இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் கடந்த புதன்கிழமை (6) மாலைக்குள், நிட்டம்புவ எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரி, தாயையும், குழந்தையையும் பத்திரமாக காலி பிரதேசத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்றிற்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இந்த தாயும் குழந்தையும் வாடகை வீட்டில் வசித்து வந்தமையும், மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்ததுடன், வாடகை வீட்டின் மாதாந்த வாடகை பல மாதங்களாக செலுத்தாததால் வாடகை வீட்டின் உரிமையாளர் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.