Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 17:10:52 Hours

பிரதி பதவி நிலை பிரதானி தொம்பகொட இலங்கை இராணுவ டயர் தொழிற்சாலைக்கு விஜயம்

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த புதன்கிழமை (6) தொம்பகொடவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ போர் கருவிகள் தொழிற்சாலைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் டயர் மீள்நிரப்பும் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தொழில்துறை நடவடிக்கைகள் என்பவற்றை அவதானித்தார்.

ஆயுதத் தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத் படையினரின் பாரம்பரிய பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானிக்கு வழங்கிய பின்னர். அவரை போர்கருவி சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரயஜித் விதானாச்சி மற்றும் நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க ஆகியோர் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது பிரதி பதவி நிலை பிரதானி டயர் மீள்நிரப்பும் பிரிவை அவதானித்து அதன் தொழிநுட்பச் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், தொழிற்சாலையில் பணிபுரியும் படையினருக்கு வாழ்த்து தெரிவித்த மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளின் தரத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.