Header

Sri Lanka Army

Defender of the Nation

07th July 2022 16:29:57 Hours

இன்னல்களுக்கு முகம் கொடுத்த வெளிநாட்டவருக்கு மாத்தறை படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அடைய உதவி

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர், மாத்தறையில் உள்ள தமது தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (7) காலை கடமையாற்றிய பொழுது ஒரு வெளிநாட்டவரின் போதிய எரிபொருள் இன்மையால் வாகனம் திடீரென நின்றதையடுத்து, அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்குச் செல்வதற்கு அவர்கள் உதவினர்.

வீதியின் நடுவில் வெளிநாட்டுப் பிரஜையின் வாகனம் திடீரென நின்றதை தொடர்ந்து அது பாதையைத் மரித்து காணப்பட்டதுடன் அதனைச் வீதியோரம் தள்ளி, மாத்தறை நகரின் அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்குச் செல்லக்கூடிய அளவில் சிறிதளவு பெட்ரோலைக் கொடுத்துதவினர்.

முகாமில் இருந்த வீரர்களில் ஒருவர் தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து எரிபொருளை பெற்று, குறித்த வெளிநாட்டுப் பிரஜைக்கு இலவசமாக வழங்கினார். சிப்பாயின் இச் செயற்பாட்டினால் வெளிநாட்டவர் மிகவும் மனமகிழ்ச்சியடைந்தார்.