Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2022 14:19:30 Hours

யாழ் தளபதி மாவட்ட செயலாளருடன் கருத்துக்கள் பகிர்வு

அண்மையில் நியமிக்கப்பட்ட யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் 2022 ஜூலை 4 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்து குடாநாட்டின் பொது நிர்வாக விடயங்கள் குறித்து யாழ். மாவட்டச் செயலாளர் திரு கணபதிப்பிள்ளை மகேஷனுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

புதிய யாழ். தளபதிக்கு மாவட்டச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கிராம சேவை அதிகாரிகள் உட்பட அனைத்து கிராம மட்ட நிர்வாகிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, பிராந்தியத்தில் சுமூகமான அரச நிர்வாகத்தைப் பேணுவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து ஆதரவை வழங்கவும் உறுதியளித்தார். மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், நலன்புரி பணிகளை மேம்படுத்துதல் மற்றும் சிவில்-இராணுவத்தின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடினர்.