05th July 2022 14:29:11 Hours
இலங்கை தேசிய படகோட்டும் மற்றும் கயாக்கிங் சங்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த தேசிய படகோட்டும் மற்றும் கயாக்கிங் போட்டி - 2022 இல் இலங்கை இராணுவ பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றனர்.
இது தியவன்ன நீர்பரப்பில் 2022 ஜூன் 3 முதல் 5 வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் (ஆண்கள்) 10 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று சம்பியன்ஷிப்பை தன்வசமாக்கியது.
இதேவேளை, 8 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை இராணுவ வீராங்கனைகள் தேசிய போட்டியில் சம்பியன்ஷிப்பை வென்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், இராணுவ வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து வென்றுள்ளனர்.