Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2022 14:23:34 Hours

613 வது பிரிகேட் அமெரிக்க நன்கொடையாளர்களின் அனுசரனையில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

இராணுவ பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அனுசரணை ஒருங்கிணைப்புடன் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (03) பத்தேகம துடுகமுனு விகாரையில் வைத்து 100 உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

அனுசரணையாளரான அமெரிக்காவை வசிப்பிடமாக கொண்ட திரு பி.எஸ் ஜகோடா அவர்கள் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியின் அலுவலகத்தின் மூலம், அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து அப்பகுதி வரிய மக்களை விகாரை வளாகத்திற்கு வரவழைத்து, இந்த நிவாரணப் பொதிகளை இலவசமாக விநியோகித்தனர்.

613 வது பிரிகேட் தளபதி கேணல் இந்திக்க ஜயவீர, 613 வது பிரிகேட் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆதரவுடன் விநியோகத் திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார். இத்திட்டத்தின் போது நன்கொடையாளரும் குறித்த நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.