Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2022 14:15:23 Hours

முதலாவது படையணியின் படையினர்கள் தற்போதைய வளர்ச்சிகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளை புதுப்பிப்பு

கிளிநொச்சி முதலாவது படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜூன் 23 தொடக்கம் 25 வரையிலான மூன்று நாள் பயிற்சித் திட்டம், முதலாவது படையணியின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், வழங்கல் படையலகுகளின் அறிவைப் பயிற்றுவித்து மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டன. முதலாவது படையணி தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் அவர்களின் பொறுப்புகள் இதன் போது கவனம் செலுத்தப்பட்டன.

06 அதிகாரிகள் மற்றும் 213 சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றினர், இதில் உள்ளக பாதுகாப்பு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு, விஷேட பிரமுகர் பாதுகாப்பு மற்றும் வீதி தடைகளின் செயற்பாடுகள், முறையற்ற கூட்டத்தை கலைத்தல், சுற்றிவலைப்பு மற்றும் தேடல் போன்றவைகள் இதில் உள்ளடங்கியது.

முதலாவது படையணியின் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் வசந்த லியனவடுகே அவர்களின் ஆரம்ப உரையுடன் பயிற்சி நிகழ்ச்சி ஆரம்பமானதுடன் முதலாவது படையணியின் தலைமையகத்தின் பயிற்சிப் பிரிவினால் மேற்பார்வையிடப்பட்டது.