Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2022 17:09:57 Hours

வழங்கள் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் அசோக அபன்பொல நியமனம்

இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள வழங்கள் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் 20 வது பணிப்பளராக பிரிகேடியர் அசோக அம்பன்பொல செவ்வாய்க்கிழமை (28) பதவியோற்றார்.

அலுவலகத்தை வந்தடைந்த அவர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், புதிய பணிப்பாளர், பணிப்பகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரிடம் உரையாற்றி, வரவிருக்கும் நாட்களில் தனது செயல் திட்டத்தை விளக்கினார்.

அவரது புதிய நியமனத்திற்கு முன்னர், அவர் இலங்கை இராணுவ சேவைப் படையணி மையத்தின் நிலையத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.