Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2022 21:21:10 Hours

படையினர் மன்னார் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு

விவசாயச் சமூகங்கள் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 562 வது பிரிகேடின் அழைப்பின் பேரில் மன்னார் இரணை இலுப்பைக்குளம் பிரதேச விவசாயப் பயிற்றுவிப்பாளர் திரு எம். சஜித் அவர்கள் 30 ஜூன் 2022 அன்று மன்னார் விளாத்திகுளம் (MN43) மற்றும் பரசங்குளம் (MN44) கிராம சேவை பிரிவுகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விரிவுரைகளை ஆற்றினார்.

15 வது (தொ) இலங்கை சிங்க படையணி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, இதில் இரு பகுதிகளிலும் வசிக்கும் 52 விவசாயிகள் கலந்து கொண்ட விரிவுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், விவசாயிகளை விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான பயிர்கள் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இரு இடங்களிலும் அந்த விழிப்புணர்வு அமர்வுகளின் போது பங்கேற்பாளர்களுக்கு சிற்றுண்டிகளும் படையினரால் வழங்கப்பட்டன.

562 வது பிரிகேட் தளபதி, 15 வது (தொ) இலங்கை இராணுவ சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்குபற்றினர்.