Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2022 21:24:56 Hours

அனுசரணையாளர்களின் ஆதரவுடன் படையினர் முன்பள்ளி சிறார்களுக்கு திரையரங்கு

எக்ஸஸ் இஞ்சினியரிங் (Access Engineering) மற்றும் ஜெ. லங்கா வறையறையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 65 வது படைப்பிரிவின் 653 பிரிகேட் படையினரின் பொறியியல் திறன்களை பயன்படுத்தி துணுக்காய் ஆலங்குளம் அதிரதன் முன்பள்ளிக்கு ஒரு சிறிய திரையரங்கு கட்டிடம் (15 X 40 அடி) நிர்மாணிக்கப்பட்டு 23 ஜூன் 2022 அன்று நடைபெற்ற விழாவின் போது மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சிவில்-இராணுவத்தின் ஒத்துழைப்புத் திட்டமாக 03 பெப்ரவரி 2022 அன்று கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் 23 ஜூன் 2022 அன்று கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, எக்ஸஸ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் (Access Engineering) திரு.வருண மல்லவர்ச்சி, ஜே. லங்கா வறையறையறுக்கப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளர், திரு. தேசப்பிரிய, மாகா பொறியியலாளர் திரு. சம்பத், முல்லைத்தீவு முன்பள்ளி ஒருங்கிணைப்பு அதிகாரி திரு.யோகஸ்வரன். 65 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சரசிங்க, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எ.எ.என்.பி அதுருகிரிய, 65 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், முன்பள்ளி ஆசிரியர் திருமதி சுகிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.