Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2022 14:02:34 Hours

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் வடக்கிற்கான விஜயத்தில் யாழ். 55 வது படைப்பிரிவிற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், அதிமேதகு திரு மிசுகோஷி ஹிடேகி அவர்களுடன் ஒரு தூது குழுவினருடன் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்த போது, புதன்கிழமை (29) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் சார்பாக 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களால் வரவேற்று, பாதுகாப்புப் படையினரின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான அவர்களின் பணிகள், பசுமை விவசாயத் திட்டங்கள், அத்தியாவசியப் பணிகள் சுமூகமாக நடைபெறுவதற்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இக்கட்டான காலங்களில் சேவைகள் மற்றும் யாழ் குடாநாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், சிவில் மற்றும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்தும் வகையில் நல்லிணக்க செயல்முறைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு திரு மிசுகோஷி ஹிடேகி பாதுகாப்புப் படையினரின் சேவைகளைப் பெரிதும் பாராட்டினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் யாழ். மக்கள் மத்தியில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதைப் பாராட்டிய அவர், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது என்னங்களை பதிவு செய்தார்.

இறுதியில், மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் ஜப்பானிய தூதுவர் ஆகியோர் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி , மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.