Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2022 12:15:11 Hours

211 வது பிரிகேடின் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படை சிப்பாய்கள் நிவாரணப் பொதிகள் விநியோகம்

211 வது பிரிகேடின் 2 வது (தொ) விஜயபாகு காலாட்படை படையணி படையினரால் அனுசரணையாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் ஔஷதபிட்டிய, இரட்டைபெரியகுளம் பகுதியில் வசிக்கும் 55 வரிய குடும்பங்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி சமைத்த உணவுப் மற்றும் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர் அந்த நிவாரணப் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் பங்குகொண்டனர்.

சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டமானது வர்த்தகரான திரு. சமன் குணதிலக்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் அனுசரணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 211 வது பிரிகேட் தளபதி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும், 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் அவரது சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.