24th June 2022 10:50:11 Hours
33 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ஷீன் குணவர்தன அவர்கள் தான் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதனை முன்னிட்டு, இலங்கை இராணுவ தொண்டர் படை பிரதி தளபதி கடமைகளில் இருந்து வியாழன் (23) அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் விடுகை பெற்றார்.
அன்றைய தின அதிதியை இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரிகேடியர் நிர்வாக பிரிகேடியர் சுசந்த ஜயமான்ன அவர்கள் வரவேற்றதுடன் விடுகை பெறும் தளபதிக்கு நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினரால் வழங்கப்பட்ட வழக்கமான அணிவகுப்பு மரியாதையை மதிப்பாய்வு செய்வதற்காக இலங்கை இராணுவ தொண்டர் படையின் பயிற்சி அதிகாரி பிரிகேடியர் துசித சில்வா அவர்கள் வெளியேறும் பிரதி தளபதியை அழைத்துச் சென்றார்.
31 வது பிரதி தளபதியாக அவர் பதவி வகித்த காலத்தை நினைவுகூரும் வகையில் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார். மேலும் தொண்டர் படையின் பெருமைமிக்க வரலாற்றில் ஒரு அழியாத அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், தலைமையகத்தில் உள்ள படையினர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களும் பணிவிலகிய பிரதித் தளபதியை நேரில் சென்று சந்தித்து நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
படையினர் மத்தியில் உரையாற்றிய வெளியேறும் பிரதி தளபதி, இராணுவத்தின் நோக்கங்களை அடைய தனக்கு ஒத்துழதை்த தொண்டர் படைய அனைத்து படையினர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன். அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி கலந்து கொண்டார்.
பிரதான வாயிலுக்குச் செல்லும் இருபுற சாலையோரம் வரிசையாக நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆரவாரங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி தலைமையகத்தில் இருந்து புறப்பட்டார்.