25th June 2022 17:00:39 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் (ஜூன் 21- 24) வரையான நான்கு நாள் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட எண்ணக்கருவின் கீ்ழ் போதைப்பொருள், ஆபத்தான போதைப் பொருட்கள், அதன் விளைவுகள் மற்றும் அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் தொடர்பாக குறித்த செயலமர்வானது நடாத்தப்பட்டது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் இராணுவ மனநலப் பிரிவின் உளவியலாளர் பிரிகேடியர் (வைத்தியர்) ஆர்.எம்.எம் மொனராகலை, மற்றும் வைத்திய நிபுணர்கள் மற்றும் இராணுவத் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநலப் பணிப்பாளர் அலுவலகத்தின் மனநலக் குழுவினர் ஆகியோர் குறித்த செயலமர்வுகளுக்கு தங்களது பங்களிப்பினை வழங்கினர்.
போதைப்பொருள் தடுப்பு, மன அழுத்த மேலாண்மை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாடு போன்றவற்றில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் 400 க்கும் மேற்பட்ட படையினர் கலந்துகொண்டனர்.
இறுதி செயலமர்வில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.