26th June 2022 18:04:59 Hours
கிளிநொச்சியில் உள்ள மாஸ் இன்டிமேட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களின் அவசர இரத்த தேவையைக் கருத்தில் கொண்டு,முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 65 இற்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தனர்.
இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஆதார வைத்தியசாலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் வியாழக்கிழமை (23) ஆரம்பமாகியது.
படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் படையினர் பொது மக்களின் நலன்களுக்காக மனிதாபிமான இந்த திட்டத்தில் இணைந்து கொண்டனர்.