26th June 2022 19:04:59 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 64 வது படைப் பிரிவுத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் வண தலகல சுமணரதன நாயக்க தேரரின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் Tan Nagak & Kee Meng Leng Foundation Limited, களுத்துறை சாசனராக்ஷக பலமண்டலயம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Royal College Old Boys' East Coast Foundation ஆகியவை இணைந்து முதியன்கட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 1500 குடும்பங்களுக்கும் ஒட்டுசுட்டானில் 400 குடும்பங்களுக்கும் 2022 ஜூன் 21 அன்று உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளன.
நன்கொடையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 64 வது படைப்பிரிவின் படையினர் மற்றும் 641 வது பிரிகேட் படைவீரர்களால் தெரிவு செய்யப்பட்ட தகுதியான குடும்பங்களுக்கு விநியோகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சில மூத்த அதிகாரிகள், அரச அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோக திட்டத்தில் இணைந்தனர்.