24th June 2022 08:30:26 Hours
66 வது படைப்பிரிவின் 10 வது தளபதியான மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பூனேரின் 66 வது படைப்பிரிவு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற சம்பிரதாய இராணுவ சம்பிரதாய நிகழ்வின் போது தனது கடமைகளில் இருந்து விடுகை பெற்றார்.
வெளியேறும் தளபதிக்கு 66 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர், வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்த அவர் நினைவு சின்னமாக குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் 66 வது படைப்பிரிவின் படையினர்களுக்கு உரையாற்றியதுடன், தனது 08 மாதங்களுக்கும் மேலான சேவையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், 66 வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில தமக்கு உறுதுணையாக இருந்த படையினருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதே உணர்வில் தங்கள் அர்ப்பணிப்பு பணிகளை தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க அங்கு வந்திருந்தனர், இறுதியாக, தளபதி சிறிது நேரத்திற்குப் பிறகு படையினர்களுடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தற்போது சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.