Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2022 09:00:11 Hours

53 படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பெறுப்பேற்றார்

53 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 29 வது தளபதியாக மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்கள், வெள்ளிக்கிழமை (17) ஹபரணையில் அமைந்துள்ள படைபிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

22 வது கஜபா படையணியின் படையினரால் தலைமையக வளாகத்திற்கு வருகைதந்த தளபதிக்கு பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி, புத்த துறவிகளின் 'செத் பிரித்' பராயணகளுக்கு மத்தியில், புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக, புதிய தளபதி தனது சம்பிரதாய உரையினை படையினருக்கு வழங்கியதை தொடர்ந்து புதிய தளபதி வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். அன்றைய நிகழ்வில் 532, 523 வது பிரிகேட் தளபதிகள், எயர் மொபைல் பிரிகேட் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

தற்பொழுது 52 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களுக்கு பதிலாகவே இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.