Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2022 21:00:26 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் (பீரங்கி) படையணியால் - ஏழு புதுபிக்கப்பட்ட 25-பவுண்டு துப்பாக்கிகள் இலங்கை பீராங்கி படையணிக்கு வழங்கல்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் (பீரங்கி) படையணி ஜூன் 17 அன்று இலங்கை பீரங்கி படையணிக்கு முழுமையாக ஏழு புதுப்பிக்கப்பட்ட 25 பவுண்டர் துப்பாக்கிகளை உத்தியோகபூர்வமாக இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாக அணிவகுப்பு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.

இராணுவத் வள வழங்கல் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும் இராணுவ இயந்திர பொறியியல் (பீரங்கி) படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.வி.ஏ அத்தநாயக்க அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை மின்சார மற்றும் இராணுவ இயந்திர பொறியியல் படையணியின் நிபுணர்கள் இந்த துப்பாக்கிகளை புதுப்பித்து பெரும் தொகை செலவினங்களை குறைத்துள்ளனர்.

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே. ஜயசேகர,பீரங்கி பிரிகேட் தளபதி, பிரிகேடியர் டி.பி. வெலகெதர,இலங்கை பீரங்கி படையணி தலைமையக நிலைய தளபதி, பிரிகேடியர் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே, இலங்கை பீரங்கி படையணி தலைமையக பிரதி நிலைய தளபதி, டபிள்யூ.டபிள்யூ.கே. ரொஹன் ஆளனி நிர்வாகப்ப பணிப்பகத்தின் கேணல் (விழா), கேணல் எம்.பி.எஸ்.பி. குலசேகர ஆகியோர் நிகழ்வில் அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.